சென்னை:
வாங்கினேன்... செம டோஸ் வாங்கினேன் என்று ஓப்பன் வாய்ஸ் விட்டுள்ளார் இவர். 


டோஸ் வாங்கியது பநீகாந்த். அப்போ டோஸ் விட்டவர் யார் என்று தெரியுங்களா? இதோ விஷயம் இதுதான்... வரும் 19ம் தேதி பநீகாந்த், சந்தானம் நடித்த படம் நம்பியார் வெளியாக உள்ளது.


இந்த படம் தயாராகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வெளிவர முடியாமல் மூச்சு திணறி வந்தது. தற்போது பெரும் முயற்சிக்கிடையில் வெளியிடுகிறார் பநீகாந்த்.


இதுகுறித்து பநீகாந்த் கூறுகையில், இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஆர்யா போன்றவர்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி அவரது பாடலுக்கு நடனம் ஆடுவது போல் வருகிறார். ஆர்யா எனது நண்பனாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடித்து பிறகு மச்சி உனக்கு எவ்ளோ பேமெண்ட் என்று கேட்டேன்.


அவ்வளவுதான் விட்டான் செம டோஸ். அதெல்லாம் இங்கே சொல்லவே முடியாது. இந்த துறையில் முக்கியமாக சம்பாதித்தது இந்த மாதிரியான நட்பு தான். எப்போதும் நான் மறக்க மாட்டேன் என்று நல்ல நட்பை அனைவரும் அறிந்து கொள்ள தெரிவித்துள்ளார் பநீகாந்த்.



Find out more: