சென்னை:
எத்தனை காமெடியன்கள் வந்தாலும் போனாலும்... இவருக்கு என்று இருக்கும் மவுசு.. மவுசுதான்... இதை யாராலும் மறுக்க முடியாது.


அவர் யார் தெரியுங்களா? கலக்கல் கவுண்டமணிதான் அவர். இன்றும் அவர் மைக் பிடித்தாலே அதிர்கிறது. காமெடி சேனலில் இன்னமும் ப்ரைம் டைம் கவுண்டமணிக்கு மட்டும் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.


தற்போது அவரை திரையில் பார்க்க ரசிகர்கள் தவித்து, ஏங்கி வருகின்றனர். அந்த ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்வோமா...
சொல்லிடுவோம்.. வரும் 25-ம் தேதி வர்றார்... வர்றார்... கவுண்டர் தரிசனம் கொடுக்க. ஒரு படம் அல்ல இரண்டு படங்கள் வாயிலாக.


என்ன படங்கள் தெரியுங்களா? வாய்மை படம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் சாந்தனு, பிரித்வி, தியாகராஜன், மனோஜீடன் டாக்டர் பென்னி என்ற பெயரில் கவுண்டமணி தன் அலப்பறையை படம் முழுக்க கொடுத்துள்ளாராம்.


இன்னொரு படம் எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படம். அப்போ ரசிகர்களுக்கு டபுள் டிரீட் காத்திருக்கு... காத்திருக்கு...


Find out more: