சென்னை:
நம்ம மாஸ் டைரக்டர் அங்கும் மாஸ் ஆகி உள்ளார்... யார் என்று தெரிகிறதா?
நம்ம நாட்டாமை டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார்தான் அவர். சுதீப்பை வைத்து இவர் இயக்கிய படம் முடிஞ்சா இவன புடி. கன்னடம், தமிழில் வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க நாளை முதல் தமிழகத்தில் கூடுதலாக 120 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படறாங்களாம்.
அதுமட்டுமா... கன்னடத்தில் இப்படம் நான்கு நாட்களில் 18 கோடி வசூல் செய்து புதிய வரலாற்றை ஏற்படுத்தி இருக்குன்னா பார்த்துக்கோங்க... மொத்தமாக படம் ரூ. 22 கோடி வரை வசூலில் அள்ளிடுச்சாம்... முடிஞ்சா இவன புடி படக்குழு இதனால் ரொம்ப உற்சாகமாக இருக்காங்களாம்...