டும் டும் சிங்கமுத்துவுக்கா....என்னங்க ஒன்னும் புரியவில்லையா..... இதோ வரேன்...
அதாவது கோலிவுட் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக்கிற்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. கார்த்திக் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. இவர் காயத்திரி என்ற ப்ரியாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன், சென்னை வல்லக்கோட்டை முருகன் கோவிலில் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணத்தை அடுத்து வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.