தனுஷ் நடிப்பில், துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கொடி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6.30 மணிக்கு அதிகார பூர்வமாக வெளிவருகிறது. 


தனுஷ், த்ரிஷா, அனுபமா, சதிஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து நீண்ட நாட்கள் ஆகியும், இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமலே இருந்து வந்தது. 


இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு படக்குழுவினர் இதன் ரிலீஸ் தேதியை இணையதளத்தில் அறிவிக்கவுள்ளனர். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


மேலும் இந்த படத்தில் தனுஷ் இரண்டு தோற்றத்திலும், திரிஷா நெகடிவ் ரோலிலும் நடித்துள்ளார். தனுஷின் வொண்டர்பார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


Find out more: