அண்மையில் ஜீவா நடிப்பில் திருநாள் திரைப்படம் வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'கவலை வேண்டாம்' திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.


இந்நிலையில் ஜீவா தற்போது 'கீ' கொடுக்க தயாராகியுள்ளார். என்ன புரியவில்லையா..... அதாவது..... ஜீவா தற்போது 'கீ' என்ற புது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 


இந்த படத்தின் பூஜைவிழா இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் ஜீவா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி  நடிக்கவுள்ளார். கலீஸ் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தை 'குளோபல் இன்போடைன்மெண்ட்' சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவுள்ளார்.


மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், மனோ பாலா, சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, மீரா கிருஷ்ணன், பத்ம சூர்யா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.


மேலும் இதன் படப்பிடிப்பு நாளையிலிருந்து தொடர்ந்து நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.



Find out more: