சென்னை:
உண்மைதானாம்... உண்மைதானாம்.. நேற்று வைரலான படம் உண்மைதானாம்... என்ன விஷயம் தெரியுங்களா?
சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் மதுரை முத்து. இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் பலியானார். இந்நிலையில் முத்துவும் ஒரு பெண்ணும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற படம் ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் உலா வந்தது. இது உண்மையா... இல்லையா என்று தெரியாத நிலையில் தற்போது அது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.
மணப்பெண் நிவேதா மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவராம். பல் டாக்டராக இருக்கும் இவர் மதுரையில் சில லோக்கல் சேனல்களில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளாராம். இவர்களின் திருமணம் மதுரை திருமங்கலத்தில் உள்ள ஒரு கோவிலில் நடந்தது என்று கூறப்படுகிறது.