மும்பை:
நான் அப்படி நடிக்கவே இல்லை... அப்படி பேட்டியும் கொடுக்கவில்லை என்று டென்ஷனாகி இருக்கிறார் நடிகை டாப்சி.
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இவர் நடித்த இந்தி படம் பிங்க் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது.
இதில் பெண் கொடுமைகள் பற்றி பேசப்படுகிறது. இந்நிலையில் வட இந்திய பத்திரிக்கை ஒன்றில் இந்த படத்தில் டாப்சி கற்பழிப்புக்குள்ளான பெண்ணாக நடிக்கிறார் என்று ஒரு செய்தி வர... அவ்வளவுதான்... பொங்கி விட்டார் டாப்சி.
இந்த படத்தில் நான் அப்படியெல்லாம் நடிக்கவில்லை, இந்த மாதிரி பேட்டியும் நான் தரவில்லை என கோபமாக தன் தரப்பை தெரிவித்துள்ளார். படம் வரட்டும் பார்க்கலாம் என்கின்றனர் ரசிகர்கள்...