தல அஜித் தற்போது தனது 57-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹீரோயினாக நடிக்கிறார்கள்.
ஐரோப்பாவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் நடிக்கும் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இந்நிலையில், காஜல் அகர்வால் இந்த படத்தில் நடித்த அவரது ஸ்டில்களை, விளம்பரத்திற்காக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். வங்காள பெண் போல் மேக்அப் அணிந்திருந்த அந்த ஸ்டில் வெளிவந்த கொஞ்ச நேரத்திலே, வைரலானது.
இதையறிந்த இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் காஜலிடம் கோபம் கொண்டு, அவரை திட்டியுள்ளனர். மேலும் இயக்குனர் சிறுத்தை சிவா, காஜலிடம் எங்களிடம் கேட்காமல் ஏன் இந்த படத்தில் நீங்கள் நடித்த ஸ்டில்களை வெளியிட்டீர்கள்.
எங்களிடம் கேட்காமல் எந்த ஸ்டில்களையும் நீங்கள் வெளியிட கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக காஜலுக்கு கண்டிஷன் போட்டுள்ளாராம். இதனால் காஜல் இனிமே இந்த படம் முடியும் வரை எந்த போட்டோவையும் வெளியிட போவதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம்.