சென்னை:
அப்ப இருந்த கூட்டணி மாறி இப்போ இவர் வந்திருக்காராம்... அப்படியா... அப்படியா என்று கேட்குது கோலிவுட் வட்டாரங்கள்...
என்ன விஷயம் என்றால்... சிவகார்த்திகேயன் படங்களில் தொடர்ந்து சூரி, சதீசுக்கு மட்டுமே காமெடியனாக, நண்பனாக நடிக்க வாய்ப்புகள் அமைந்து வந்தது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இந்த முறை சிவகார்த்திகேயனுடன் களத்தில் இறங்கி காமெடி செய்யப்போவது யார் தெரியுமா? சமீப காலமாக திரையில் கலக்கி வரும் ஆர்ஜே பாலாஜி தான் அவர். இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.