ஐதராபாத்:
காலம் கடந்து இந்த அவமானம்... இவருக்கு தேவையா என்று கேட்கின்றனர்... யாருக்கு தெரியுங்களா?
தென்னிந்திய சினிமாவையே பெருமைப்படுத்தும் விதமாக பாகுபலி படத்தை ராஜமௌலி எடுத்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது மனுசன் பிசியோ... பிசி...
இந்நிலையில் தமிழில் வந்த சிறுத்தை படத்தை தெலுங்கில் எடுத்தது ராஜமௌலி தான், இதில் ஒரு சண்டைக்காட்சியில் துப்பாக்கியில் உள்ள புல்லட்டை கீழே தூக்கிப்போட்டு வில்லனை கொல்வார் கார்த்தி.
இந்த காட்சி பழைய விஜயசாந்தி படத்தின் ஈயடிச்சான் காப்பி என்று ரசிகர்கள் ஆதாரத்துடன் தற்போது நிரூபிக்க... ஆந்திராவே பரபரப்பாகி உள்ளது. அதுமட்டுமா? பல காட்சிகளை ராஜமௌலி காப்பி தான் அடித்துள்ளார் என்று நிறைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
காலம் கடந்து பல சாதனைகள் செய்த நிலையில் இந்த அவமானம் தேவையா?