இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'மாவீரன் கிட்டு' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, பார்த்திபன் உள்பட பலர் நடிக்கின்றனர்.  ஐஸ்வேர் வீ.சந்திரசாமி மற்றும் தாய் சரவணன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். 


இதன் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15-ந்தேதி தொடங்கியது. இந்நிலையில் 37 நாட்களிலே இந்த படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இயக்குனர் சுசீந்திரன் உள்பட படக்குழுவினர் அனைவரும் இரவு-பகல் பாராமல் உழைத்தால், இப்படம் விரைவில் இறுதிக்கட்ட நிலைக்கு வந்துள்ளது.


தற்போது ஒரு படத்தை 90 நாட்களுக்கு மேல் எடுத்து முடிக்கும் இயக்குனர்கள் மத்தியில்,  37 நாட்களில், 95 சதவீத படப்பிடிப்பை சுசீந்திரன் எடுத்து முடித்துள்ளது சாதனையாக கருதப்படுகிறது. 


மேலும் இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 



Find out more: