ஹிந்தி சினிமாவில் கொடி கட்டி பறந்த சில நட்சத்திரங்கள், லக்ஸ் சோப் விளம்பரத்தில் நடித்துள்ளார்கள். அவர்களின் அரிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவை உங்கள் பார்வைக்காக
1. லீலா சிட்னிஸ்

முதன்முறையாக லக்ஸ் சோப் விளமபரத்தில் நடித்தவர் லீலா சிட்னிஸ் தான்.
2. அசுரே

இவர் மிகவும் பிரபலமான டான்சர். ஏராளமான திரைப்படங்களில் பணியாற்றியவர்.
3. பாரதி தேவி

நடிகையாக திரையுலகிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு ஏராளமான ஹிந்தி மற்றும் பெங்காலி திரைப்படங்களில் பாடி, பல விளம்பர படங்களிலும் நடித்தார்.
4. மனோரமா

'சீதா அயூர் கீதா' திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் ஏரளமான லக்ஸ் சோப் விளம்பரங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 'வாட்டர்' என்பது குறிப்பிடத்தக்கது.
5. ரத்தன் பாய்

இவர் 1933-ல் ஹிந்தி சினிமாவிற்கு, நடிகையாக அறிமுகமானார். பல திரைப்படங்களில் பாடல்களும் பாடினார்.
6. ஷோபனா சமர்த்

நடிகை காஜலின் பாட்டி தான் இவர். இவர் 1935-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி, பல படங்களில் நடித்தார்.
7. மும்தாஸ் ஷாந்தி

இவர் 1940-1950 வரை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். பல படங்களில் நடித்த இவர் லக்ஸ் சோப் விளம்பரத்திலும் நடித்தார்.
8. ஹசன் பனோ

சிங்கப்பூரில் பிறந்த இவர் 1943-ம் ஆண்டு, ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். இவர் ஓர் சிறந்த பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.
9. நீனா

1942-ம் ஆண்டு வெளிவந்த 'ஏக் ராத்' திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவிற்கு அறிமுகமானார்.
10. மாயா பேனர்ஜி

இவர் 1930-1940 வரை பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தார்.