சென்னை:
புது முயற்சி... புது முயற்சியாக இப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளார் இந்த தயாரிப்பாளர். இதனால் வெற்றி கிடைக்குமா? காத்திருப்போம்...
என்ன முயற்சி தெரியுங்களா? சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் வரும் அக்.7ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்குதான் ஒரு புதிய முயற்சியை படத்தின் தயாரிப்பாளர் எடுத்துள்ளார்.
ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு முடிவு செய்துள்ளார். வழக்கமாக இந்தியாவில் வெளியாவதற்கு முதல்நாள் படம் வெளிநாடுகளில் வெளியிடப்படும். இதனால்தான் படம் ஆன்லைனில் வெளியாகிறது.
ஆனால் ரெமோ படம் இந்தியாவில் வெளியாகும் அன்றுதான் வெளிநாட்டிலும் வெளியாகுமாம். இதன்மூலம் படத்தின் கதை, வீடியோகள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தவிர்க்க முடியும். இந்த முயற்சி வெற்றியடைந்தால் இனி வரும் படங்களுக்கும இதுபோன்ற நடவடிக்கை கண்டிப்பாக வெற்றியை தரும் என்று நம்பப்படுகிறது.