மும்பை:
அமீர் கான் ஒரு தமிழ் பட ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஜு முருகனின் ஜோக்கர் படம் சமூக அவலங்களை தைரியமாக எடுத்துக்கூறியதால் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களும் பெரும் ஆதரவு தந்து வருகின்றனர்.
![](http://www.filmibeat.com/fanimg/joker-photos-images-41281.jpg)
தற்போது இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதில் இந்தி ரீமேக்கில் அமீர் கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜோக்கர் படத்தை, தமிழ் சினிமாவின் பிகே என பலர் கருத்து தெரிவித்தது இங்கு கண்டிப்பாக குறிப்பிடத்தக்கது.