சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க கியூவில் நிற்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில், ரஜினியே நேரில் ஒரு பெண்ணை தனது இல்லத்திற்கு அழைத்து, அவரை சந்தித்துள்ளார். விஷயம் என்னவென்றால்...


'கபாலி' திரைப்படத்தின் முதல் டீசர் வெளிவந்த போது, அந்த டீசரில் ரஜினி சொல்லும் டையலாக்களை மாற்றியமைத்து, 'பொண்டாட்டி டா' என்று பேசிய டப்ஸ்மாஷய் பெண் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டார். 



இந்த டப்ஸ்மாஷ் நல்ல பரவலாக சமூக வலைத்தளங்களில் ஹிட்டானது. இதை சமீபத்தில் ரஜினி பார்த்துள்ளார்.அந்த பெண் பேசியது ரஜினிக்கு மிகவும் பிடித்து போனதால், அவரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். 


தற்போது ரஜினி, தனது மருமகன் தனுஷின் இல்லத்தில் வசித்து வருவதால், அங்கு அந்த பெண்ணை வரவழைத்து, அவரை சந்தித்து, பாராட்டி, போட்டோ எடுத்துள்ளார். 


மேலும் அந்த பெண்ணுடன் ரஜினி சேர்ந்து எடுத்துள்ள போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Find out more: