'சிவா மனசுல சக்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் ராஜேஷ். இதையடுத்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'ஆள் இன் ஆள் அழகுராஜா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.
தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது பின்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ராஜேஷ் இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும்,இவர் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ, தமிழ் ஹெரால்டு சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.