சென்னை:
வரும் 1ம் தேதி ஆடியோ ரிலீஸ்... விரைவில் படம் ரிலீஸ் என்று கோலிவுட் குருவி என்று உரக்க சொல்லி பறந்தது.


எந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தெரியுங்களா! அருண் விஜய் நடிக்கும் ‘குற்றம் 23’ படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


‘ஈரம்’ படம் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் புதிய படம் ‘குற்றம் 23’. இந்த படத்தை அருண் விஜய்யே பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பிற பணிகள் நடந்து வருகிறதாம்.


இப்படத்தின் பாடல்களைதான்  வரும் செப். 1-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். விரைவில் படம் ரிலீஸ் தேதியும் சொல்வாங்க என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


Find out more: