நமது இந்திய சினிமாவில், சில நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்த கொஞ்ச நாளிலே விவாகரத்து பெற்று, மீண்டும் காதலித்து செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நீங்களே பாருங்கள்.
கமல் ஹாசன்
இவர் முதலில் வாணி கணபதியை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றார். பிறகு இரண்டாவதாக சரிகாவை திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்து, தற்போது நடிகை கவுதமி உடன் வாழ்ந்து வருகிறார்.
நாகர்ஜுனா
இவர் முதலில் லக்ஷ்மியை காதலித்து திருமணம் செய்தார். பிறகு கொஞ்ச வருடங்களிலே அவரை விவாகரத்து செய்து விட்டு, நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.
அமீர் கான்
இவர் முதலில் காதலித்து ரீனாவை மணந்தார். பிறகு வரை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக கிரண் ராவ்வை மணந்தார்.
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் முதலில் லலிதா குமாரியை காதலித்து திருமணம் செய்து, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பன் ஆனார். பிறகு லலிதாவை விவாகரத்து செய்து விட்டு, தற்போது போனி வர்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.
செல்வராகவன்
இயக்குனர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலை காதலித்து, முதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக கீதாஞ்சலியை மணந்தார்.
சரத்குமார்
நடிகர் சரத்குமார் காதலித்து, சாயாவை முதலில் திருமணம் செய்து கொண்டார். பிறகு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்தார்.