சென்னை:
இவங்களுக்காக போராடியதை நினைத்தால் அருவெறுப்பாக உள்ளது என்று சேரன் காட்டம் காட்டியுள்ளார். எதற்கு தெரியுங்களா?


சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேரன்... தயாரிப்பாளர்கள் திருட்டி டிவிடியால் சிரமப்படுவது குறித்து பேசும் போதுதான் உணர்ச்சிவசப்பட்டார். அப்போது அவர் கூறியதுதான் இது.


தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி கிடைக்கிறது. போலீசாரும் இதை கண்டுகொள்வதில்லை.


தமிழன்னு என்று சொல்றபோது பொங்கி எழும் உணர்வுகள் இருக்கே... சொல்லி மாளாது. ஆனால் அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று தெரியும் போது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.


இப்படி படத்தை திருட்டுத்தனமா ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள் என்று சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக இந்த திரையுலகமே திரண்டு வந்து போராடியது. இப்போ... இலங்கை தமிழர்களில் சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படும் போது இவர்களுக்காக ஏண்டா இதை பண்ணினோம் என அருவெறுப்பாக உள்ளது என்று காட்டமாக பொங்கி எழுந்துவிட்டார் சேரன். 


இவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்புமா... அல்லது அவரது பேச்சில் உள்ள உண்மை உரைக்குமா என்பது போக... போகத்தான் தெரியும்.


Find out more: