முதன்முறையாக இயக்குனர் கவுதம் மேனன், தனுஷிற்கு எதிராக செயல்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. இதை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
தனுஷ், கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விரைவில் பின்தயாரிப்பு பணிகள் தொடங்க இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது வெளிவந்த தகவலில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தில், தனுஷிற்கு எதிரியாக கவுதம் மேனன் நடித்துள்ளாராம். புரியவில்லையா... அவர் முதன்முறையாக இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளிவரும் வரை நாம் இந்த தகவலை நம்ப வேண்டாம்.