சென்னை:
தர்மதுரை வெற்றியா... தோல்வியா என்ற சர்ச்சை எழுந்தாலும் படம் சைலண்டாக மெகா ஹிட் அடித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க படம் சக்ஸஸ் மீட்டையும் சந்தித்து விட்டது. 


இந்நிலையில் சிலர் தர்மதுரை படம் தோல்வி... வசூல் இல்ல என்று சர்ச்சையை கிளப்ப... தற்போது வரை தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் தர்மதுரை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதில் சென்னையில் மட்டும் ரூ 1.88 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


தர்மதுரை தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடிக்கு வியாபாரம் நடந்ததுள்ளதாம். அப்படி என்றால் சைலண்டாக மெகா ஹிட் அடித்துள்ளது என்றுதானே அர்த்தம். 


ஹிட் படங்களில் துண்டு விரித்து அனாயசமாக இடம் பிடித்துள்ளது தர்மதுரை என்றுதான் கூறவேண்டும்.



Find out more: