சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர்  7-ந்தேதி வெளிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு டபுள் பிரமோஷன் கிடைத்துள்ளது.


விஷயம் என்னவென்றால்... இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவிற்கு 'ரெமோ' மிகவும் பிடித்து போனதால், பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தையும் அவரே தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். 


மேலும் இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாராம். அது மட்டுமல்ல இந்த படத்திற்கான அட்வான்ஸ் தொகையை பாக்யராஜ் கண்ணனுக்கு, ஆர்.டி. ராஜா வழங்கியுள்ளார். 


இதோடு ரெமோ திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியதற்கு ஆர்.டி.ராஜா, 5 கோடி சம்பளமும் வழங்கியுள்ளாராம். இதனால் அவர் மிகவும் ஹாப்பியாம். 


மேலும் கோலிவுட்டில், முதல் திரைப்படத்திலே 5 கோடி சம்பளம் பெற்ற இயக்குனர் இவராக தான் இருக்கும்.


Find out more: