சென்னை:
அவருடன் சேர்ந்தாலே போதும் போலிருக்கிறதே என்று கோலிவுட் வாயை பிளந்து கேட்கிறது. என்ன விஷயம் தெரியுங்களா?
இதோ சொல்லிடுவோம்... சிவகார்த்திகேயன் சம்பளம் தான் அதிகம் ஆகிறது என்று நினைத்தால் அவருடன் பணியாற்றுபவருக்கும் ஜாக்பாட் அடிச்சுடுச்சு... என்கின்றனர் கோலிவுட் வாசிகள். எப்படி? எப்படி? இப்படித்தான்.
ரெமோ படத்தின் இயக்குனருக்கு இப்போ... செம்ம லக்கு மாமேய்... என்கின்றனர். சமீபத்தில் ரெமோ படத்தின் பர்ஸ்ட் காப்பியை படக்குழு பார்த்துள்ளது, படம் அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டதால், இயக்குனருக்கு அடுத்து படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து இருக்கு தயாரிப்பு தரப்பு. இது ஏற்கனவே அறிந்த செய்தி... இருந்தாலும் இப்ப உள்ளதுதான் ஹாட் மச்சி... ஹாட்...
அடுத்த படத்திற்கு இவருக்கு பேசியுள்ள தொகை ரூ.5 கோடியாம். என்ன ஆட்டோமேட்டிக்கா வாய்பிளக்கிறதா? பிளக்கும்... பிளக்கும்... இப்போ சொல்லுங்க... சிவாவோடு சேர்ந்தால் மற்றவர்களுக்கும் லாபம்தானே...