சென்னை:
அவரா... இவரோட அடுத்த படத்தை இயக்கப்போறது அவரா... என்று கோலிவுட் வாசிகள் வியப்பின் உச்சத்தில் உள்ளனர். இது உண்மையா?
என்ன விஷயம் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கபாலி படத்தின் வசூல் பல்வேறு சாதனைகளை செய்து... பல சாதனைகளை முறியடித்து விட்டது. இப்போது ஷங்கரின் 2.0 படம் மட்டுமே ரஜினிகாந்த் ஒத்து கொண்டு நடித்து வருகிறார்.

இதையடுத்து ஸ்டைலிஸ் இயக்குனர் என்று சொல்லப்படும் கௌதம் மேனன் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்ற தகவல்தான் கோலிவுட்டில் இறக்கை கட்டி பறக்கிறது.
கபாலி கதையை கேட்பதற்கு முன் கௌதம் மேனனிடம் ரஜினி கதை கேட்டார் என்பதும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டிய ஒன்று என்று சொல்கின்றனர். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் ரஜினியை இன்னும் ஸ்டைலிசாக காட்டுவார் கௌதம் மேனன் என்கிறார்கள்.