தமிழ்த்திரையுலகில், தற்போது ஒரு பாடகர் மரணம் அடைந்துள்ளார். இவர் பெயர் திருவுடையான். கமல் ஹாசன் நடித்த 'விருமாண்டி' மற்றும் 'மதயானை கூட்டம்' உள்ளிட்ட சில படங்களில் பாடியுள்ளார். 


48 வயது கொண்ட இவர் இன்று அதிகாலை மதுரை சென்ற போது, இவர் கார், விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலே திருவுடையான் மரணம் அடைந்தார். மேலும் அவருடன் சென்ற அவரது சகோதரர் தண்டபாணி மற்றும் கார் டிரைவர் இருவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.


இருவரும் தற்போது மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


மேலும் இவரது ஆத்மாவிற்கு தமிழ் ஹெரால்டு சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.


Find out more: