கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'தனி ஒருவன்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று, பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. இந்த படத்தை இயக்கிய மோகன்ராஜா தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறார். 


இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'தனி ஒருவன் பார்ட் 2 கூடிய சீக்கிரம் தொடங்கும். இதில் ஜெயம் ரவி தான் ஹீரோ. இந்த படம் ரவியின் 25-வது படமாக அமையும்' என்று தெரிவித்தார்.


மேலும் முந்தய பாகத்தில் நடித்த நயன்தாராவே இதில் கதாநாயகியாக நடிப்பார் என தெரிகிறது. 


ஜெயம் ரவி தற்போது 'போகன்' மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருவதால் அந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு, அவர் தனிஒருவன்-2 -ல் நடிப்பார் என தெரிகிறது.


மேலும் இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: