சென்னை:
டைம் இல்லை... நேரம் இல்லை... என்று பொட்டில் அடித்தது போல் பதில் சொல்லி வதந்தியை உண்மையாக்கி உள்ளார் இவர்.


யார் என்று தெரியுங்களா? வேறு யாரு? ஸ்ருதிஹாசன்தான். இவர் தற்போது சபாஷ் நாயுடு படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாகவே நடித்து வருகிறார். இந்த படத்தின் போதுதான் கௌதமிக்கும், இவருக்கும் லடாய் ஏற்பட்டது என்று கோலிவுட் வட்டாரங்கள் பரபரத்தன.


ஆனால் இது வதந்திதான் என்று இருதரப்பினரும் மறுப்பு சொன்னது தனிக்கதை. இந்நிலையில்தான் கௌதமியை சந்தித்தீர்களா என்று ஸ்ருதியிடம் கேட்க... அதற்கு அவர் ‘என் தந்தை, தங்கை, நண்பர்களை பார்க்க நேரம் உள்ளது, மற்றவர்களை பார்க்க தான் நேரமில்லை’ என்று பொட்டில் அடித்தது போல் கூறியுள்ளார். இதனால் கோலிவுட் வட்டாரங்கள் மீண்டும் பரபரக்கின்றன.



Find out more: