பாலிவுட் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நட்சத்திரங்கள் சிலர், காதலரை உயிருக்கு உயிராக காதலித்து ஒன்றாக வாழ்ந்து, கருது வேறுபாட்டினால் பிரிந்துள்ளனர். அவர்களை யார் யார் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.
1. ரன்பிர் கபூர் - கத்ரீனா கைப்
நடிகர் ரன்பிர் கபூரும், கத்ரினாவும் உயிருக்கு உயிராக காதலித்து, திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.
2. ஜான் ஆபிரகாம் - பிபாஷா
ஜான் அப்ரஹாமும், பிபாஷாவும் நெருக்கமாக பழகி வந்தனர். அதன் பிறகு என்ன காரணம் என்றே தெரியவில்லை, இருவரும் பிரிந்து, அண்மையில் பிபாஷா கரணை மணந்தார்.
3. பிரியங்கா சோப்ரா - ஷாஹித் கபூர்
நடிகை பிரியங்காவும், ஷாஹித்தும் காதலித்து, சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு ஷாஹித் வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.
4. தேவ் படேல் - பிரிடா பின்டோ
இவர்கள் இருவரும் 6 வருடம் நெருக்கமாக பழகி வந்து, ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர்.
5. சைப் அலி கான் - ரோஸ்சா
இருவரும் காதலித்து, திருமணம் செய்தனர். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று தற்போது சைப், கரீனாவை மணந்து, அவருடன் வாழ்ந்து வருகிறார்.
6. கங்கனா - ஆதித்யா பஞ்சொலி
இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென பிரிந்தனர்.
7. விக்ரம் பாட் - அமீஷா படேல்
விக்ரம் பாட்டும், அமீஷாவும் சேர்ந்து வாழ்ந்த கொஞ்ச நாட்களிலே பிரிந்தனர்.
8. லாரா தத் - கெலி டோர்ஜி
இவர்கள் இருவரும் 8 வருடம் ஒன்றாக வாழ்ந்த பின்பு பிரிந்தனர்.
9. அபய் டியோல் - ப்ரீத்தி டிசை
நான்கு வருடம் சேர்ந்து குடும்பம் நடத்திய பின்பு இவர்கள் பிரிந்தனர்.
10. சுஷாந்த் சிங்க் - அங்கிதா
இவர்கள் இருவரும் 6 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு திடீரென சுஷாந்த், அங்கீதாவை பிரிய போவதாக தனது டிவிட்டரில் அறிவித்தார்.