மும்பை:
அப்புவாகிறார்.... "அப்பு" வாகிறார் இவர் என்று பாலிவுட் வட்டாரங்கள் பரபரக்கின்றன.


யார் அந்த பாலிவுட் ஸ்டார் தெரியுங்களா? ஷாருக்கான்தான் அவர். இவர் தனது அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடித்ததுபோல் அப்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். 


தொழில்நுட்பட வசதிகள் இல்லாத காலத்தில் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமல் "அப்பு" வேடத்தில் கலக்கி இருந்தார். அவர் எப்படி நடித்தார் என்பது இதுவரை யாருமே அறியாத மர்மம்தான். 

அபூர்வ சகோதரர்கள்

Image result for அபூர்வ சகோதரர்கள்

இப்போ...பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் அதுபோல் நடிக்க உள்ளாராம். ஆனந்த் எல்.ராய் இயக்க, ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இன்னும் படத்திற்கு பெயர் வைக்கலையாம்...


இப்ப ரசிகர்கள் எதிர்பார்ப்பது டெக்னாலஜியை வைத்து குட்டையாவாரா? கமல் போல் கலக்குவாரா என்றுதான். என்ன செய்ய போகிறார் ஷாருக்கான்.


இன்னும் படமே தொடங்காத நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை சொல்லிட்டாங்க... என்ன தேதி தெரியுங்களா? 2018-ம் ஆண்டும் டிசம்பர் 21-ந் தேதிதான் படம் ரிலீஸ் ஆகுதாம்... 


Find out more: