சென்னை:
ஏற்றி விட ஏணி போல் இருந்தவரை எட்டி உதைக்கலாமா என்று வேதனையோடு கேட்கின்றனர் கோடம்பாக்கத்து கோவிந்துகள். எதற்காக தெரியுங்களா?


நடிகர் ஜே.கே. ரித்தீஷ், நடிகர் சங்கம் தேர்தலின் பொது விஷால் அணிக்கு ஆதரவாக களம் இறங்கியவர் தீவிரமாக பணியாற்றினார். பாண்டவர் அணியின் வெற்றிக்கு பின்னாடி இவரது அபார உழைப்பு இருக்கு என்கின்றர் விபரமறிந்தவர்கள்.


ஜெயிச்சா அரசியல்வாதியாக இருந்தா என்ன நடிகராக இருந்தா என்ன எல்லோரும் ஒரே மாதிரிதான் இருப்பாங்க போலிருக்கு... ஏறி வர ஏணிபோல் இருந்தவரை இப்போ உதாசீனப்படுத்தி வருகிறாராம் விஷால். இதனால் ரித்தீஷ் விஷால் மீது செம கடுப்பில் இருக்க...


சமீபத்தில் நடிகர் சங்க மாஜி செயலாளர் ராதாரவியின் பிறந்த நாளில் நிகழ்ச்சி நடந்தது. இதில் வராகி, ஜே.கே.ரித்தீஷ் கலந்து கொள்ள... இங்கு ஒரு தீர்மானம் எடுத்து இருக்காங்க... தயாரிப்பாளர் சங்க விஷாலுக்கு எதிராக ரித்தீஷை தலைவர் பதவிக்கு போட்டியிட செய்ய போறாங்களாம்... இதுக்கு பின்னாடி ராதாரவி மறைமுகமாக முழு ஒத்துழைப்பு கொடுக்க உள்ளார் என்று பரபரக்கிறது கோலிவுட். என்னவோ போங்க... ஒற்றுமை இல்லாட்டி இப்படிதான்...



Find out more: