சென்னை:
நல்லா இருக்கும்மா.. உங்க ஸ்டேட்மெண்ட்டு... இப்படியே நினைச்சா அம்புட்டுதான் என்று முகத்தை இடித்து சொல்கிறார் கோடம்பாக்கம் கோகிலா.
இவர் என்ன சொல்ல வர்றார். யாரை சொல்ல வர்றாருன்னு கேட்கிறீங்களா? காஜல் அகர்வால் பற்றிதான். இவரை பற்றி காதல், கல்யாணம் குறித்து பல செய்திகள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றனர்.
இதற்கெல்லாம் பதில் சொல்லும் போதுதான்... இப்படி சொல்லியிருக்காராம். நான் யாரையும் காதலிக்கவில்லை, எனக்கு பிடித்த ஜோடியாக இருந்தால் போதும். என் எண்ணங்களை நேசிக்கணும்.
அவரது சொந்த வாழ்க்கையை விட என் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரை தான் நான் காதலிப்பேன் என்று கூறியுள்ளார். நல்லா சொல்றீங்கம்மா டீயெல்லு... இப்படி நினைச்சா எப்பூடி...