கோலிவுட்டில் வளர்ந்து வரும் இரண்டு இயக்குனர்கள் தற்போது வாழ்க்கையில் முக்கியமான இடத்திற்கு சென்றுள்ளனர்.
விஷயம் என்னவென்றால்.... சூர்யா நடித்த '24' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம் குமார் நேற்று தனது காதலி ஸ்ரீநிதியை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
ஸ்ரீநிதி, இசைப்புயல் ஏ.ஆ.ரகுமானிடம் ஒளி வடிவமைப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அண்மையில் வெளிவந்து, வெற்றி நடை போட்ட 'ஜோக்கர்' திரைப்பட இயக்குனர் ராஜு முருகன் தனது காதலியை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் திருமணம், குன்றத்தூர் கோயிலில் நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த இரண்டு இயக்குனர்களுக்கும் தமிழ் ஹெரால்டு சார்பில் நல்வாழ்த்துக்கள்.