சென்னை:
சமீபத்தில் நான் ரசித்த செம காமெடி எது தெரியுங்களா? என்று கேட்டுள்ளார் இவர்.
யார் தெரியுங்களா? தமிழ் சினிமாவில் தற்போது கிடுகிடுவென்று முன்னணிக்கு வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து இவரது படங்கள் வெளி வர காத்திருக்கிறது. இந்நிலையில் இவர் நான் பயங்கரமாக சிரித்த விஷயம் எது என்று தெரியுங்களா? என்று கேட்டு அவரே பதிலும் சொல்லியிருக்கிறார். எனக்கும் காமெடி நடிகர் சதீசுக்கும் திருமணம் என்று வந்த கிசுகிசு தான் என்று சிரித்தப்படியே சொல்லியுள்ளார்.
நல்லா நடத்துங்க... உங்க காமெடியை... எந்த புற்றுல எந்த பாம்போ... போங்க... கடைசியில ரசிகர்களைதான் ஙே...ன்னு முழிக்க வைப்பீங்க.