சென்னை:
யார் அந்த களவாணிகள் என்று கோலிவுட் அதிர்ந்து போய் உள்ளது. காரணம் படக்குழுவினர் வெளியிடுவதற்கு முன்பே படத்தை பற்றிய விஷயங்கள் இணையத்தில் பரவுவதுதான்.
விஷயம் என்னன்னா? சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் அனைத்து பாடல்களும் அதற்கு முன்னபாகவே இணையத்தில் லீக் ஆகியுள்ளது. பாடல்கள் அனைத்தும் சட்டவிரோதமாக பாடல்களை வெளியிடும் வலைத்தளங்களில் வெளியாகி உள்ளதால் ரெமோ படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இப்படி யார் பாடல்களை திருடி பதிவேற்றி இருக்க முடியும் என்று தெரியாமல் அதிர்ந்து போய் உள்ளனர்.