சென்னை:
இது அடுத்த களவாணிகள் செய்த செயல்... ஆனால் தப்பு எங்கிருந்து முளைத்தது என்பதை படக்குழு கண்டுபிடித்துள்ளது.


விஷயம் என்னன்னா? விஜய் 60 படத்திற்கு பைரவா என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் நேற்று நள்ளிரவுக்கு மேல் தான் வெளியிடுவதாக இருந்தனர்.


ஆனால் நேற்று மதியமே சமூக வலைத்தளத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும்... படத்தின் தலைப்பும் வெளியாக படக்குழுவிற்கு மயக்கம் வராத குறைதான். அதனால் உடனே அவர்கள் அதிகாரப்பூர்வமாக போஸ்டரை உடன் வெளியிட்டனர்


அதுமட்டுமா... ரகசியமாக வைத்திருந்த இது எப்படி லீக் ஆனது என்று விசாரணையில் இறங்க... திருட்டுப்பயல் இவனாகத்தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் கண்டுபிடித்து இருக்காங்களாம். என்னன்னா... போஸ்டர் அச்சிடப்படும் இடத்தில் இருக்கும் யாரோ மர்ம நபர்தான் இதை இப்படி வெளியிட்டு இருக்காங்க என்று தெரிய வந்துள்ளது. இந்த விசாரணை தொடர்வதால் போஸ்டர் அச்சிடுபவர்கள் டென்ஷனாகி இருக்கிறார்கள். இனிமேல் பெரிய படங்களின் ஆர்டர் வராவிட்டால் என்ன செய்வது என்று?


Find out more: