சென்னை:
ஆச்சரியப்பட்டு விட்டேன்... ஒரே டேக்... ஒரே டேக்தான் தெரியுங்களா? என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் விஜய் புராணம் பாடுகிறார் இந்த புதுமுக நடிகை.


விஜய்யின் பைரவா படம் பிசியாக நடந்து வருகிறது. படத்தோட இறுதிகட்ட படப்பிடிப்பு என்பதால் படக்குழு செம பிசியோ... பிசி. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தோழியாக திவ்யா தனபால் என்ற மாடல் அழகி அறிமுகமாகிறார்.


இவர்தான் இப்படி விஜய்யை பற்றி புகழாரம் சூடி இருக்கிறார். படப்பிடிப்பில் மற்ற நடிகர்கள் ஒத்திகை பார்த்துவிட்டு நடிப்பார்கள். ஆனால் விஜய் வசனத்தை பார்த்து விட்டு ஒரே டேக்கில் அசத்தி விடுவார். இதனால் நான் சிலிர்த்து விட்டேன். அவருக்கு எது பலம் தெரியுங்களா? அவரின் க்யூட்னசும், காமெடி டைமிங்கும் தான் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்து போகிறாராம். அப்படியே கதையையும் உளறி கொட்டி விடாத கண்ணு என்று எச்சரித்துள்ளதாம் படக்குழு...


Find out more: