ஐதராபாத்:
நான் யாரு... நான் யாரு... ஹிட் கொடுக்கும் அதுவும் தொடர்ந்து ஹிட் கொடுக்கும் ராசி நடிகைன்னு பாடாத குறைதான் சமந்தா...


விஷயம் இதுதாங்க... சமீபகாலமாக சமந்தா நடித்து வரும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது. இது இவரது ராசியா... இல்ல படங்களின் அழுத்தமான கதையா என்பது அல்ல பிரச்னை. 


தற்போது இவர் தொடர் ஹிட் ராணியாகி இருப்பதுதான். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ஜனதா கரேஜ் என்ற படம் வெளியாகி 2 நாட்களில் வட அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்ததுதான் ஹாட்.


விஜய்யுடன் தெறி, சூர்யாவுடன் 24, மகேஷ்பாபுவுடன் பிரம்மோற்சவம் (அட்டர் பிளாப்), நிதினுடன் ஒரு படம் என்று நடித்திருந்தார். இதில் தெறி செம தெறி... 24 பரவாயில்லை ரகம் ஆக... இப்போது ஜனதாகரேஜ் செம ஹிட் அடித்ததால் அம்மணி தான் ஹிட் நடிகைன்னு டமாரம் அடிச்சுக்கிட்டு இருக்காராம்...


Find out more: