சென்னை:
என்னாங்க நடக்குது இங்க... என்று கோலிவுட் மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். எதற்காக என்று தெரியுங்களா?


இதோ சொல்லிடுவோம். முத்துக்கு முத்தாக', 'சந்திரமுகி', 'கோரிப்பாளையம்' படங்களில் நடித்தவர் சுஜிபாலா. இவர் மீது ஏற்கனவே ஒரு சர்ச்சை ஓடிக்கிட்டு இருக்கு. ரவிக்குமார் என்ற இயக்குனரை திருட்டுத்தனமாக திருமணம் செய்தார் என்று. இப்போ என்னன்னா...
திடீர்ன்னு ஊட்டியைச் சேர்ந்த பிரனேஷ் என்பவரை இன்று காலை திருமணம் செய்துள்ளார்.


இன்று நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இவர்களின் திருமணம் நடந்தது. நடிகை சுஜிபாலா கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை நிற திருமண ஆடையை அணிந்திருக்க... மணமகன் பிரனேஷ் கோட், சூட் அணிந்திருந்தார்.  அப்போ... இயக்குனர் ரவிக்குமார் என்று கேட்கிறீர்களா... அவருக்கு டைவேர்ஸ்தான்... என்ன போங்க...


Find out more: