சென்னை:
விரைவில்... விரைவில் புதுச்சேரியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
என்ன நடக்கும் என்கிறீர்களா? சூர்யா-ஸ்ருதிஹாசன் நடிக்கும் சிங்கம் 3 தொடர்பான காட்சிகள் புதுச்சேரியில் படமாகும் என்ற தகவல்கள்தாங்க...
‘ஏழாம் அறிவு’ படத்துக்குப் பிறகு சூர்யாவுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம்தான் சிங்கம் 3. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இப்போ... இந்த படத்திற்காக படக்குழு புதுச்சேரியில் முகாமிட்டு இருக்காங்களாம்.
இதுவரை புதுச்சேரியையே பார்த்திராத ஸ்ருதிஹாசன் முதல் முறையாக இங்கு சென்றதை தனது டுவிட்டர் பக்கத்தில் சொல்லியிருந்தார். இவர் புதுச்சேரிக்கு போனது இந்த படத்தின் படப்பிடிப்புக்காக என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சில முக்கிய காட்சிகளை இங்குதான் படமாக்க உள்ளனராம்.