அண்மையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'தர்மதுரை' திரைப்படம் தற்போது வசூலில் சாதனை படைத்து, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. இந்த படத்தை ஆர்.கே.ஸ்டூடியோ சார்பில் சுரேஷ் தயாரித்தார். 


இவர் 'தாரை தப்பட்டை', 'மருது' உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தற்போது முதன் முறையாக எழில் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். கிராம பின்னணியில் உருவாகும் இந்த படத்தில், ஆர்.கே.சுரேஷ், உதயநிதிக்கு வில்லனாக நடிக்க உள்ளார். 


இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்கால் பகுதியில் நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: