சென்னை:
பட்டையை கிளப்ப ஆரம்பித்து விட்டார் இவர்... யார் இவர்... யார் என்று பார்ப்போமா?


விக்ரம் நடிப்பில் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்த படம் இருமுகன். இந்த படம் நேற்று வெளிவந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.


எப்படி என்கிறீர்களா? இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுங்களா? ரூ 5.5 கோடியாம். எப்பூடி! இத்தனைக்கும் நேற்று விடுமுறை தினம் கூட இல்லை என்பதுதான் முக்கியமானது. 


அப்படின்னா... வரும் நாட்களில் இந்த படம் வசூலில் செம அள்ளு அள்ளும் என்கின்றனர். பார்ப்போம்... என்ன நடக்கிறது என்று.


Find out more: