ஆந்திரா:
செமத்தியான வியாபாரத்தை பார்த்துள்ளது.... இந்த படம்... ஆரம்பக்கட்டத்திலேயே என்று அதிசயித்து போகின்றனர் தெலுங்கு பட உலகினர்.
என்ன விஷயம் என்றால்... பாகுபலி படம் வியாபாரத்தை முறியடித்து செமத்தியாக கல்லாவை ரொப்பி உள்ளதாம் தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் கைதி நம்பர் 150 படத்தின் வியாபாரம் என்கின்றனர்.
எப்படி என்கிறீர்களா? தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் 150 படமாக தமிழ் கத்தி படத்தின் ரீமேக் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை கிளாஸிக் சினிமாஸ் நிறுவனம் அள்ளிக் கொண்டுள்ளதாம். எவ்வளவுக்கு தெரியுங்களா? ரூ.13.5 கோடிக்கு வாங்கியிருக்காம். ஆரம்பத்திலேயே இப்படியா?
பாகுபலி அமெரிக்காவில் ரூ.9 கோடிக்கு தான் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன்தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.