கர்நாடகா:
எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் பெண்... பெண்தான். அவரை தாக்கி தரக்குறைவாக பேசக்கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார் இவர். யார் தெரியுங்களா?
தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கர்நாடகாவே பற்றி எரிகிறது. அதுமட்டுமா... தங்கள் பங்குக்கு கன்னட நடிகர்களும் களத்தில் குதித்து போராட்டம்... போராட்டம் என்று கொடி பிடித்துள்ளனர்.
கன்னட சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் மற்றும் பேரணி பெங்களூரில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை அருகேயுள்ள சிவானந்தா சர்க்கிளில் நடந்தது. இதில் பேசிய பலரும் தமிழக அரசையும், ஜெயலலிதாவையும் தரம் தாழ்ந்து பேசியது வேதனையை ஏற்படுத்தியது போல் அமைந்தது.
ஆனால் இதை உடனே கண்டித்து பேசி... பெண்களை உயர்வு படுத்தினார் கன்னட சூப்பர் ஸ்டார். யார் தெரியுங்களா? அவர் நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட சூப்பர்ஸ்டாருமான சிவராஜ்குமார்தான்.
அவர் பேசியதாவது: “எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண்... என்பவர் பெண்தான். எனவே யாரும் அவரை தரக்குறைவாக பேசக்கூடாது. தமிழ்நாடு வேறு நாடு இல்லை. நமது பக்கத்து மாநிலம்தான். கர்நாடகாவை போன்றே, தமிழகத்திலும் விவசாயிகள் உள்ளனர்.
ஒரு விவசாயின் துயரம் மற்ற விவசாயிக்கு தெரியும். எனவே இரு தரப்பும் பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும். கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் பாருங்க... மற்ற அனைவரும் கப்சிப்... எதிர்க்க முடியுமா... இருப்பினும் அவரது பேச்சு உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்றுதானே...