சென்னை:
செம கூல் நடிகரான விக்ரமை தொகுப்பாளரின் கேள்வி செம டென்ஷனாக்கி பதில் சொல்ல வைத்துள்ளது என்று கோலிவுட் கோமதி சொல்றாங்க... சொல்றாங்க...
விஷயம் என்னன்னா? விக்ரம் ரொம்பவும் ஜாலியான மனிதர். தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்பதே இல்லாத நடிகர் ஒருத்தர் இருக்கார்ன்னா... அவர் விக்ரம்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் இருமுகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார் இவர். அப்போது கேட்கப்பட்ட கேள்வி கூல் மனிதரான விக்ரமை டென்ஷன் படுத்தி இருக்கு. இவரிடம் நீங்கள் கஷ்டப்பட்டு நடித்த ஐ படம் தெலுங்கில் ஓடவில்லையே என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க... பொங்கி விட்டார் விக்ரம்.
பதட்டத்துடன் ‘படம் ஓடவில்லையா, தெலுங்கில் ஐ வந்த போது பவன் கல்யானின் படம் வந்தது. அப்படி வந்தும் ஐ நல்ல வசூலை தந்ததாக தெரிவித்தனர். உலக அளவில் ஐ படம் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளது’ என கோபமாக பதில் தெரிவித்துள்ளார்.