சென்னை:
ஏங்க... நடிப்பில் கவனம் செலுத்த போறேன்னுதானே சொன்னேன்... அதற்காக அரசியலுக்கு முழுக்கு என்று சொல்வது சரியா என்று வேதனையுடன் கேள்வி எழுப்பி உள்ளார் இவர்.


யார் தெரியுங்களா... அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார்தான். சட்டசபைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு சரத்குமார் தோல்வியடைந்தார். இதனால் சற்றே ஒதுங்கி இருக்கிறார்.


இந்நிலையில் சினிமாவில் கவனம் செலுத்த போகிறேன் என்று இவர் கூறியது... அரசியலுக்கு முழுக்கு என்பதுபோல் செய்தி வர செம டென்ஷன் ஆகிவிட்டார் சரத். 


இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியலுக்கு முழுக்குப் போடவில்லை. தேர்தல் முடிந்தவுடன் விஜயகாந்த் கூட அமைதியாக தான் இருக்கிறார். அவரும் அரசியலுக்கு முழுக்கு என்று உங்களால் சொல்ல முடியுமா? 


நடிப்பு என் தொழில். அரசியல் மக்களுக்காற்றும் சேவை. அதனால் நடிப்பையும்... இதையும் சேர்த்து பேசவேண்டாம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.



Find out more: