'மெட்ராஸ்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான கலையரசன், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' திரைப்படத்தில் நடித்தார்.இதையடுத்து தற்போது 'அதே கண்கள்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


1967-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'அதே கண்கள்' திரைப்பட தலைப்பை தழுவி, இப்படம் உருவாகுகிறது. இதில் கலையரசன் ஹீரோவாகவும், 'நெடுஞ்சாலை' திரைப்பட நாயகி ஷிவதா நாயகியாகவும் நடித்து வருகின்றனர். 


'திருக்குமரன் என்டேர்டைன்மெண்ட்' சார்பில் சிவி குமார் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரோகன் வெங்கடேஷ் இயக்குகிறார். இசை பணிகளை ஜிப்ரான் மேற்கொள்கிறார். மேலும் இதில் ஜனனி மற்றும் பாலசரவணன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.


Find out more: