பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் அக்ஷய் குமார் பற்றிய சில முக்கிய விஷயங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இவரை ரசிகர்களுக்கு பிடிக்க காரணம் இது தான். இப்போது நீங்களே அதை பாருங்கள்.
1. இவர் தன்னை எப்போதும், பிட்டாக வைத்து கொள்வார். இவரது உடல் எடை எப்போதும் சம அளவில் தான் இருக்கும்.
2. இவருடைய சென்ஸ் ஆப் ஹுமர் படத்தில் மட்டும் சூப்பராக இல்லை. நிஜ வாழ்க்கையிலும் தான். இவர் கலகலப்பான குணம் கொண்டவர்.
3. இவர் ஒரு சூப்பர் செப். சமையல் செய்வதில் இவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இவர் பள்ளி படிப்பை முடித்த பிறகு, பாங்காக்கில் செப்பாக பணிபுரிந்தாராம்.
4. இவர் பெண்களுக்கு எப்போதும் மரியாதையை கொடுப்பார். பெண்களிடம் மரியாதையோடு பழகும் குணம் கொண்டவர்.
5. இவர் சிரிக்கும் போது, மிகவும் அழகாக தெரிவார். கள்ளம் கபடம் இல்லாமல் குழந்தைகள் எப்படி சிரிக்குமோ, அது போல் சிரிப்பார்.