சென்னை:
சின்னத்திரையில் வேட்டையனாக வந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்த கவின் தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாகும் படம் "நட்புன்னா என்னான்னு தெரியுமா?"... ஜாலி காமெடியாக இந்த படம் தயாராகுதாம்...
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார், மூன்று நண்பர்கள் பற்றிய கதையாம் இது. இதில் ஒரு நண்பர் காதலில் விழ, பிறகு அவர்கள் வாழ்க்கையில் வரும் இன்பம், துன்பம், மோதல் பற்றிய கதையாம்.
காமெடி... காமெடி என்று காமெடி தோரணம் கட்டி உள்ளனராம் இந்த படத்தில். கண்டிப்பாக ரசிகர்களுக்கு வயிற்று வலி நிச்சயமாம். படத்தின் கடைசி 20 நிமிடத்தில் நடக்கும் காமெடிக்கு சிரித்தே வயிறு பஞ்சர் ஆகும் என்கின்றனர். நடத்துங்க... நடத்துங்க...