சென்னை:
மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படமும் துப்பாக்கி போன்ற கதைதான் என்று கோலிவுட் உளவாளி உண்ணாமலை சொல்லியிருப்பதை கேளுங்களேன். 


ரூ.100 கோடி வசூல் படங்களையே கொடுத்து வந்த இயக்குனர்  முருகதாசுக்கு "அகிரா" படம் சறுக்கலை கொடுத்துள்ளது.  ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இப்போது இவர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார்.


அகிரா சறுக்கலை அடுத்து இந்த படத்தில் செம கவனம் செலுத்தி வருகிறாராம். எவ்விதத்திலும் இந்த படம் அகிரா போல் மாறிவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவும் கதையை செதுக்கி வருகிறாராம்.


இந்த படத்தின் சூட்டிங் சென்னை இவிபி பிலிம் சிட்டியில் நடந்துவருகிறது. மகேஷ் பாபு இந்த படத்தில் போலீசாக நடிக்கிறார் என்று செய்திகள் உலா வந்த நிலையில்... இல்ல இல்ல... துப்பாக்கி படத்தில் விஜய் கதாபாத்திரம் போல் உளவுத்துறை அதிகாரிக வருகிறார் என்று ரகசியத்தை போட்டு உடைச்சிருக்காங்கப்பா... 


இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சென்னையில் சூட்டிங் முடித்த பிறகு, மும்பையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் முருகதாஸ்.



Find out more: